இறுதி செமஸ்டர் தேர்வு முடிவு இந்த வாரத்தின் இறுதியில் வெளியாக வாய்ப்பு - அண்ணா பல்கலைக்கழகம் - ஆசிரியர் மலர்

Latest

13/10/2020

இறுதி செமஸ்டர் தேர்வு முடிவு இந்த வாரத்தின் இறுதியில் வெளியாக வாய்ப்பு - அண்ணா பல்கலைக்கழகம்


 இறுதி செமஸ்டர் தேர்வு முடிவு இந்த வாரத்தின் இறுதியில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறுதி செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்த தேர்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் கடைசி 2 வாரத்தில் நடத்தப்பட்டது. அதன்படி அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு கடந்த 24-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை ஆன்லைனில் நடத்தப்பட்டது. கொள்குறி வகை வினாக்களை கொண்ட தேர்வாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் நடந்தது.

வீட்டில் இருந்தபடி லேப்டாப், கம்ப்யூட்டர், செல்போன் ஆகிய சாதனங்கள் மூலம் இணையதள வசதியுடன் தேர்வை மாணவர்கள் எதிர்கொண்டனர். முறைகேடுகள் எதுவும் நடைபெற்று விடாமல் இருப்பதற்கு ஏற்ப தொழில்நுட்பங்களை அண்ணா பல்கலைக்கழகம் பயன்படுத்தி இருந்தது. அதன்படி, 93 சதவீதம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதற்கான தேர்வு முடிவு இந்த வாரத்தின் இறுதியில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வில் முறையாக எழுதாத மாணவர்களுக்கு ‘ஆப்சென்ட்’ வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு மதிப்பெண் எதுவும் வழங்கப்படாது என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459