அரியர் தேர்வுகளை ஏன் ஆன்லைன் மூலம் நடத்த கூடாது? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி - ஆசிரியர் மலர்

Latest

29/10/2020

அரியர் தேர்வுகளை ஏன் ஆன்லைன் மூலம் நடத்த கூடாது? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

 


இறுதி பருவத் தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம் எனவும், இறுதி பருவ மாணவர்களை முந்தைய தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்ச்சியடையச் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

இறுதி பருவ தேர்வுகளை ஆன் லைன் மூலம் நடத்தும் போது அரியர் தேர்வுகளை ஏன் நடத்த கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

 

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். 

 

கடந்த முறை இந்த வழக்குகளில் பதிலளித்திருந்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், அரியர் தேர்வுகளை ரத்து செய்தது விதிகளுக்கு முரணானது எனத் தெரிவித்திருந்தது. 

 

பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில், இறுதி பருவத் தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம் எனவும், இறுதி பருவ மாணவர்களை முந்தைய தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்ச்சியடையச் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தப்போது, பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

 

பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில், அரியர் தேர்வுகள் ரத்து செய்வதில் தங்களுக்கு உடன்பாடில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இறுதி பருவ தேர்வுகளை ஆன் லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த முடியாது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.-News18

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459