சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!

 


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,489 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,19,996 ஆக உயர்ந்துள்ளது.  

 

அதிர்ச்சியளிக்கும் கொரோனா உயிரிழப்புகள்: 

 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,784 ஆக உயர்ந்துள்ளது.  

 

அதிகரிக்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை: 

 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,558 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 5,64,092 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 46,120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

 

கொரோனா பாதிப்பு - பாலின வாரியான விவரம்: 

 

தமிழகத்தில் இதுவரை தொற்று உறுதியான 6,19,996 பேரில் 3,74,285 பேர் ஆண்கள், 2,45,680 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 31 பேர் ஆகும். தமிழகம் முழுவதும் இதுவரை 77,00,011 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 86,012 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

 

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 

 

சென்னையில் 1348 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,72,773 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a comment