மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 04/10/2020 - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 04/10/2020


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,19,996 ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,64,092 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,558 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்தம் பலி எண்ணிக்கை 9,784 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,348 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,72,773 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 77,00,011 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 86,012 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 189 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,74,285 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,322 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,45,680 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 2,167 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 31 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

No comments:

Post a comment