நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு- எப்படி பார்ப்பது? முழு விவரம்! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு- எப்படி பார்ப்பது? முழு விவரம்!

 


மருத்துவ படிப்புக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது,. இதை தேசிய தேர்வு முகமையின் இணையதளமான ://../ இல் பார்க்கலாம். கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களுடன் கடந்த மாதம் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினார்கள். ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுத முடியாத நிலை இருந்தது.இதையடுத்து இந்நிலையில், கொரோனாவால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு கடந்த 14ம் தேதி தேர்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேர்வு முடிவுகளை அக்.16-ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதன்படி நீட் தேர்வு மீண்டும் 14ம் தேதி நடைபெற்றது ஏற்கனவே தவறிவிட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எழுதலாம் என அறிவிக்கப்பட்டது. தேர்வை தவறவிட்ட மாணவ மாணவியர் கடந்த 14ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடந்த தேர்வை எழுதினர். சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் எழுதினர் இதையடுத்து இரண்டு கட்டமாக நடந்த நீட் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது. தேசிய தேர்வு முகமையின் இணைய தளமான ://.../ மற்றும், ://../ ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை தேர்வு முகமை தெரிவித்தது.செப்டம்பர் மாதம் நடந்த நீட் தேர்வில் உயிரியல் பாட கேள்விகள் எளிதாக இருந்தன. அதேநேரம் வேதியியல், மற்றும் இயற்பியல் தேர்வுகளில் இடம் பெற்ற கேள்விகள் கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் 14ம் தேதி நடந்த நீட் தேர்வில்வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்தின் கேள்விகள் எளிதாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வில் கட்ஆப் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a comment