ஆசிரியர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் பள்ளி கல்வித்துறையின் அரசாணையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் - திமுக தலைவர் முக ஸ்டாலின் - ஆசிரியர் மலர்

Latest

12/10/2020

ஆசிரியர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் பள்ளி கல்வித்துறையின் அரசாணையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் - திமுக தலைவர் முக ஸ்டாலின்


 ஆசிரியர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் பள்ளி கல்வித்துறையின் அரசாணையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-
‘ஆசிரியர்கள் நேரடி நியமன வயதுவரம்பு 40 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்’ என்று பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டிருப்பதற்கு கடும்
கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இது தொடக்க கல்வித்துறையை மூடி பள்ளி கல்வித்துறையையே சீரழிக்கும் அநியாயமான
அரசாணையாகும். வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு 10 லட்சம் ஆசிரியர்கள் காத்திருக்கிறார்கள். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி
பெற்றுவிட்டு 7 ஆண்டுகளாக வேலை இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வழங்க முடியாத அ.தி.மு.க. அரசு
ஆசிரியர் கல்வி படித்தவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் இருள் சூழ வைக்கும் ஓர் அரசாணையை இதயமற்ற முறையில்
வெளியிட்டுள்ளது.
ஆகவே ஆசிரியர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் பள்ளி கல்வித்துறையின் அரசாணையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459