அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு விவகாரம் : 4 வார அவகாசம் தேவை: கவர்னர் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு விவகாரம் : 4 வார அவகாசம் தேவை: கவர்னர்

 


சென்னை: மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரத்தில் முடிவெடுக்க3 முதல்4 வார கால அவகாசம் ஆகும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து உள்ளது.மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு மசோதா குறித்து கவர்னர் மாளிகைக்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இது குறித்து பதில் அளித்துள்ள கவர்னர் பன்வாரி லால் புரோகித் கடித்ததில் தெரிவித்து இருப்பதாவது: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மசோதா தொடர்பாக முடிவெடுக்க அவகாசம் தேவை. ஐந்து அமைச்சர்களுடனான சந்திப்பின்போதும் இதே தகவல் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.மருத்து படிப்பில் உள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக முடிவெடுக்க 3 முதல் 4 வார கால அவகாசம் தேவை என ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment