அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவு: 2-வது சுற்று கலந்தாய்வு நடத்த அரசு திட்டம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவு: 2-வது சுற்று கலந்தாய்வு நடத்த அரசு திட்டம்

 


அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் கலந்தாய்வில் நிரம்பாத இடங்களுக்கு மீண்டும் சேர்க்கை நடத்த தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டயப் படிப்புகளுக்கு 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

இதற்கிடையே நடப்பு ஆண்டு சேர்க்கைக்கு இணையவழியில் 27,721 பேர் விண்ணப்பித்தனர்.அதில் 16 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்தி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர். இதையடுத்து கல்லூரிகள் அளவில் தரவரிசைப் பட்டியல் தயாரித்து கடந்த மாதம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. அதில் 8 ஆயிரம் இடங்களே நிரம்பியதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இணையவழியில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. கலந்தாய்வு தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 8 ஆயிரம் இடங்களே நிரம்பியுள்ளன. இதையடுத்து எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கு 2-வது சுற்று கலந்தாய்வு  நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்’’ என்றனர்.

No comments:

Post a Comment