நவ. 26-ல் நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்பு :தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு செயலர் ஆ.செல்வம் தகவல் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

நவ. 26-ல் நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்பு :தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு செயலர் ஆ.செல்வம் தகவல்


 நாடு முழுவதும் நவ. 26-ல் நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு செயலர் ஆ.செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கரோனா காலத்தில் முடக்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் திரும்ப வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், ஒப்பந்தம், தினக்கூலி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

ரயில்வே, பாதுகாப்புத் துறை, காப்பீடு, பிஎஸ்என்எல், வங்கி போன்ற பொதுத் துறைகளை தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் மற்றும் விவசாய சட்டத் திருத்தம் மற்றும் புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும், மத்திய மாநில அரசுத்துறைகளில் உள்ள லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

நகர்ப்புறங்களிலும் நூறு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும், பொது விநியோக முறையை சீர்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நவ. 26-ல் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

இப்போராட்டத்தில் 30 கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இதில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்கள் பங்கேற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment