ஆன்லைன் வகுப்புக்கு தந்தை செல்போன் வாங்கித் தராததால் 10ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஆன்லைன் வகுப்புக்கு தந்தை செல்போன் வாங்கித் தராததால் 10ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை

 


ஆன்லைன் வகுப்புக்கு தந்தை செல்போன் வாங்கித் தராததால் 10ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே அய்யனார்குளம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமணி. கூலித்தொழிலாளியான இவருக்கு 10ஆம் வகுப்பு படிக்கும் முருகப்பெருமாள் என்ற மகன் உள்ளார். தற்போது கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் முருகப்பெருமாளுக்கும் ஆன்லைன் வகுப்புதான் நடைபெற்றுள்ளது.

ஆனால் ஆன்லைனில் படிப்பதற்கு செல்போன் இல்லாததால் செல்போன் வாங்கித் தருமாறு தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு, செல்போன் வாங்க பணமில்லை என தந்தை கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவர் முருகப்பெருமாள் வீட்டில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment