10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு - கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு - கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

 


10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு - கல்வித் தொலைக்காட்சியில்  நடத்தப்படும் பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு ..இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.கல்வித் தொலைக்காட்சி வழியாக நடத்தப்படும் பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட பள்ளிகள், இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கல்வித் தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்த அரசு திட்டமிட்டு, அக்.1 முதல் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அரசாணை வெளியிட்டது.

ஆனால், அதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததால் அந்த அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலை இவ்வாறு நீடித்துக் கொண்டே சென்றால் 10,11,12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எப்படி எதிர்கொள்வார்கள் என்ற கேள்வி வெகுவாக எழுந்திருக்கிறது. இந்த நிலையில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து அதிகளவில் கேள்விகள் கேட்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதில் நடத்தப்படும் முக்கிய தலைப்புகளை மட்டும் ஆழமாக படிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a comment