JEE MAIN தேர்வு விவகாரம் : மத்திய அமைச்சர் விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

10/09/2020

JEE MAIN தேர்வு விவகாரம் : மத்திய அமைச்சர் விளக்கம்

நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்களில் சேர நடத்தப்படும் JEE Main தேர்வு கடந்த வாரம் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நடத்தப்பட்டது.
‘நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்த தேர்வை நடத்துவது அவசியமா?’ என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. ஆனாலும் JEE Main தேர்வு நடத்தப்பட்டது.
“கடந்த வாரம் நடைபெற்ற JEE Main தேர்வில் எத்தனை மாணவர்கள் பங்கேற்றனனர் என்பதற்கான துல்லியமான எண்ணிக்கையை நான் பெற்றுள்ளேன். தேர்வுக்கு 18 லட்சம் பேர் விண்ணப்பித்ததில் 8 லட்சம் பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இது கல்வியை புகழ்ந்து பேசும் நாட்டிற்கு இழிவு தான்” என ட்வீட் செய்திருந்தார் அவர். 
அதற்கு பதில் கொடுக்கும் விதமாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டரில் சுப்பிரமணியன் சுவாமியின் ட்வீட்டுக்கு பதில் கொடுத்துள்ளார். 
“உங்களது JEE Main தேர்வு தொடர்பான கருத்தில் உண்மையை எடுத்துச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். JEE Main தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 8.58 லட்சம் பேர் தான். நீங்கள் ட்வீட் செய்தது போல 18 லட்சம் பேர் அல்ல. 
மொத்தமாக 6.35 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதியுள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு இது சாத்தியமாகி உள்ளது. இந்த தேர்வுக்கு கடுமையாக பயிற்சி செய்து தயாராகவும் மாணவர்களின் நலன் கருதி அவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட நம் NDA அரசு இந்த தேர்வை நடத்தியுள்ளது” என தெரிவித்துள்ளார் அவர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459