கடுகு எண்ணெய்யுடன் பிற சமையல் எண்ணெய் சேர்க்க தடை!' - FSSAI உத்தரவு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

கடுகு எண்ணெய்யுடன் பிற சமையல் எண்ணெய் சேர்க்க தடை!' - FSSAI உத்தரவு


இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம்(FSSAI), அக்டோபர் 1 முதல் எந்த விதமான சமையல் எண்ணெயுடனும் கடுகு எண்ணெயைச் சேர்க்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. சுத்தமான கடுகு எண்ணெயை மக்களின் பயன்பாட்டிற்கு வழங்குவதற்காக மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ இம்முடிவை எடுத்துள்ளது.எண்ணெய்
இதுகுறித்து FSSAI வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமையல் எண்ணெயுடன் கடுகு எண்ணையைச் சேர்த்து உற்பத்தி செய்ய அக்டோபர் 1, 2020 முதல் தடை விதிக்கப்படுகின்றது. மக்களுக்குத் தூய கடுகு எண்ணெய் தயாரித்து வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
பொதுவாக, இரண்டு வகையான தாவர சமையல் எண்ணெய்களைக் கலந்து தயாரிக்கும்போது, ஒரு எண்ணெயின் அளவு 20 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கக்கூடாது என்பது விதி. ஆனால், கடுகு எண்ணெயுடன் எந்த எண்ணெயையும் கலக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment