தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு

புதுடில்லி: தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்.எஸ்.ஓ.,) நடத்திய ஆய்வில், கேரளா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. ஆந்திரா கடைசி இடத்தில் உள்ளது. தமிழகத்துக்கு 8வது இடம் கிடைத்துள்ளது.
2017 ஜூலை முதல் 2018 ஜூன் வரையிலான தேசிய மாதிரி சர்வேயை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 8,097 கிராமங்களில் உள்ள 64,519 வீடுகள், 6,188 மண்டலங்களில் உள்ள 49,238 வீடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாட்டில் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமாக கேரளா 96.2 சதவீதத்துடன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. டில்லி 88.7 சதவீதத்துடன் 2வது இடமும், உத்தரகண்ட் 87.6 சதவீதத்துடன் 3வது இடமும் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்கள் முறையே, ஹிமாச்சல பிரதேசம் (86.6%), அசாம் (85.9%), மஹாராஷ்டிரா (84.8%), பஞ்சாப் (83.7%) ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன. தமிழகத்துக்கு 8வது இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில், கிராமப்புறத்தில் 77.5% மக்களும், நகரில் 89% மக்களும் கல்வியறிவு பெற்று, ஒட்டு மொத்தமாக 82.9% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். 87.9% ஆண்கள், 77.9% பெண்கள் தமிழகத்தில் கல்வியறிவு பெற்றுள்ளனர். ஆந்திரா 66.4% கல்வியறிவு பெற்றவர்களுடன் கடைசி இடம் பிடித்துள்ளது.
மொத்தத்தில் இந்தியாவில் 77.7% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 84.7%; பெண்கள் 70.3% பேர். கிராமப்புறங்களில் 73.5% பேரும், நகர்ப்புறங்களில் 87.7% பேரும் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment