ஆன்லைன் வகுப்புகளுக்கு கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது!" - பள்ளிகல்வித்துறை - ஆசிரியர் மலர்

Latest

16/09/2020

ஆன்லைன் வகுப்புகளுக்கு கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது!" - பள்ளிகல்வித்துறை

கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணர்வர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆன்லைன் வகுப்புகளுக்கு என தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் செலுத்த கூறி சில தனியார் பள்ளிகள் வற்புறுத்துவதாக புகார் எழுந்து.

இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், ஆன்லைன் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தக் கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் செப்டம்பர் 21 முதல் 25 ஆகிய 5 நாட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் எக்காரணத்தை கொண்டும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. 

இது தொடர்பாக ஏதேனும் புகார் கிடைக்கபெற்றால் கடும் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459