அரசு பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

25/09/2020

அரசு பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் வேலைவாய்ப்பு


புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தில் பள்ளி சத்துணவு மைய அமைப்பாளர் மற்றும் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சமூக நலத்துறை. இதற்கு தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 422
அமைப்பாளர்: 158
தகுதி: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், பழங்குடியினர் எட்டாவது தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:  21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சமையல் உதவியாளர்: 264
தகுதி: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், பழங்குடியினர் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.08.2020 தேதியின்படி 21 முதல் – 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி ஆணையர்கள் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.tn.gov.in/ –இல் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

No comments:

Post a Comment