கொரோனா தொற்று... அந்த நாட்களில்... அமெரிக்கா பிரேசிலை... பின்னுக்குத்தள்ளிய இந்தியா!! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

கொரோனா தொற்று... அந்த நாட்களில்... அமெரிக்கா பிரேசிலை... பின்னுக்குத்தள்ளிய இந்தியா!!


கடந்த வார இறுதியில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் அமெரிக்கா மற்றும் பிரேசிலைக் கடந்து இந்தியா முதல் இடத்திற்கு சென்றது. கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று உலக அளவில் பதிவான கொரோனா தொற்றில் 40 சதவீதம் இந்தியாவில்தான் பதிவாகியுள்ளது. கடந்த திங்கள் கிழமை இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 74,960 பதிவாகி இருந்தது. இதற்குக் காரணம் பரிசோதனை குறைந்தது என்று கூறப்படுகிறது. ஆனால், அன்று நாடு முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,125 ஆக இருந்தது. இதுவரை ஒரு நாளில் தொற்றுக்கு உயிரிழந்தவர்களில் இதுதான் அதிகம். இதுவரை நாட்டில் கொரோனாவுக்கு 72,725 பேர் உயிரிழந்துள்ளனர்.அதேபோல் கடந்த ஞாயிற்றுக் கிழமை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் 94,000த்தை கடந்து இருந்தது. அதற்கு முதல் நாள் 90,000 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். கடந்த வார இறுதியில் மட்டும் நாட்டில் 1.80 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், அந்த வார இறுதி நாளில் அமெரிக்காவில் 73,202 பேரும், பிரேசிலில் 45,805 பேரும் பாதிக்கப்பட்டு இருந்தனர். மொத்தமாக இந்த இரண்டு நாடுகளிலும் சேர்த்து கடந்த வார இறுதி நாளில் 1.2 லட்சம் பாதிக்கப்பட்டு இருந்தனர். கடந்த திங்கள் கிழமை மட்டும் இந்தியாவில் கொரோனாவுக்கு 1,100 பேர் உயிரிழந்து இருந்தனர். மகாராஷ்டிராவில் மட்டும் 423 பேர் உயிரிழந்து இருந்தனர். இதற்கு முன்பு ஆகஸ்ட் 18ஆம் தேதி மகாராஷ்டிராவில் உயிரிழப்பு 422 அதிகபட்சமாக பதிவாகி இருந்தது. ஆகஸ்ட் 31- செப்டம்பர் 6 இடைப்பட்ட கால கட்டத்தில் தேசிய அளவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவீதம் மகாராஷ்டிராவில் இருந்து பதிவாகி இருந்தனர். தளர்வுகள் அறிவிப்பு... சென்னை உள்பட... வரும் நாட்களில் கொரோனா அதிகரிக்குமா...ஏன்!!ஆனால், மகாராஷ்டிராவில் நேற்று ஞாயிற்று கிழமை 23,000 பேருக்கு தொற்று பரவி இருந்தது. இது திங்கள் கிழமை 16,429 ஆக குறைந்து இருக்கிறது. தற்போது ஆந்திராவில் அதிகளவில் தொற்று பரவி வருகிறது. இந்த மாநிலத்தில் நேற்றுடன் தொற்று எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.

No comments:

Post a comment