தொங்கும் கத்தி.. கலக்கத்தில் அரியர் மாணவர்கள்.. குட்நியூஸ் சொன்ன சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் - ஆசிரியர் மலர்

Latest

08/09/2020

தொங்கும் கத்தி.. கலக்கத்தில் அரியர் மாணவர்கள்.. குட்நியூஸ் சொன்ன சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர்


சென்னை: அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவே இறுதியானது என சென்னைப் பல்கலை. துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார். கலை - அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ. படிப்பு படித்து வந்த அரியர் மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. கொரோனா பரவலை காரணம் காட்டி இறுதியாண்டு தவிர மாற்ற பாடங்களில் அரியர் வைத்திருந்தால் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வுக்கு தயாராக இருந்த மாணவர்கள் எல்லோரும் தேர்ச்சி என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆனால் கல்வியாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.இந்நிலையில் பொறியியல் படிப்பில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிய தமிழக அரசின் முடிவை அகில இந்திய பொறியியல் கல்வி கவுன்சில் ஏற்க மறுத்துவிட்டது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது. ஆனால் தமிழக அரசுக்கு அந்த கடிதம் அனுப்பப்பட்டதா என்பது குறித்து சரியான தகவல்கள் இல்லை. இதனால் பொறியியல் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது."ஐயா ரொம்ப நன்றிங்கய்யா.. எங்க ஓட்டு உங்களுக்குதான்".. ஆஹா.. இதுக்கு பின்னாடி இவ்ளோ மேட்டர் இருக்கா!கலை அறிவியல் கல்லூரிகலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவித்த விவகாரத்தில் இதுவரை மத்திய கல்வி வாரியமான ஏஐடியூசியிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை இதனால் அவர்களுக்கு எந்த சிக்கலும் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.துணைவேந்த நல்ல செய்திஇந்நிலையில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி இதுபற்றி கூறுகையில், அரியல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவே இறுதியானது. இதுவரை யுஜிசி மற்றும் பிற அமைப்புகளிடம் இருந்து அரியர் தேர்ச்சி தொடர்பாக எந்த தகவலும் வரவில்லை என்றார்.ஹைகோர்டில் வழக்குஇதனிடையே கலை - அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களை தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அதேபோல அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும் தமிழக அரசின் முடிவை ரத்து செய்ய கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.என்ன முடிவு வரும்அவர்கள் தங்கள் மனுக்களில், கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம், பல்கலைக்கழகங்களின் மாண்பு ஆகியவற்றை காப்பதற்காக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அரசின் அறிவிப்பால் அனைத்து பாடங்களிலும் படித்து தேர்ச்சியடைந்த மாணவர்களை அரசின் அறிவிப்பு சோர்வடைய செய்யும் என்றும் கூறியுள்ளனர். இதனால் உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்தே அரியர் தேர்ச்சி உறுதியாகும். இல்லாவிட்டால் தேர்வு எழுத வேண்டிய நிலை வரலாம். இதனால் அரியர் மாணவர்கள் கலக்கத்தில் உள்ளார்கள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459