கொரோனாவுக்கு தலைமை ஆசிரியை உயிரிழப்பு. - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

கொரோனாவுக்கு தலைமை ஆசிரியை உயிரிழப்பு.


கிருஷ்ணகிரி அருகே உள்ள தாசிரிப்பள்ளியைச் சேர்ந்தவர் பெல்லாரம் பள்ளி உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை பணியாற்றி வந்தார். அவருக்கு கடந்த மாதம் 31ந் தேதி கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு
தீவிர சிகிச்சை அளித்தும்
பலனின்றி நேற்று காலை
அவர் உயிரிழந்தார். அரசு
வழிகாட்டுதலின்படி தாசிரப்பள்ளியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் கிருஷ்ணகிரி நெசவுக்காரத் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி ஆசிரியர், பந்தாரப்பள்ளி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆகியோருக்கும் கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊத்தங்கரை காவல் நிலையல் பணியாற்றி வரும் காவலர் ஒருவருக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், காவல்நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

No comments:

Post a comment