ஐந்து ஆண்டுகளாக, இரவு பகலாக உழைத்து புதிய கல்விக் கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது - பிரதமர் - ஆசிரியர் மலர்

Latest

11/09/2020

ஐந்து ஆண்டுகளாக, இரவு பகலாக உழைத்து புதிய கல்விக் கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது - பிரதமர்


கடந்த 30 ஆண்டுகளில், உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி முறை மாறியிருக்கிறது. ஆனால், நமது நாட்டில் மட்டும் பழைய கல்வி முறையே தொடர்கிறது. நமது புதிய கல்விக் கொள்கை, புதிய இந்தியாவின் தொடக்கம். இந்தத் திட்டத்தின் மூலம், பல பள்ளிகளுக்கு பல வசதிகள் கிடைக்கும். பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு, கற்றலின் அடிப்படை நோக்கம் புரிந்துகொள்ளுமாறு புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது.
இது, மாணவர்களின் திறனை மேம்படுத்த உதவும். புதிய இந்தியா, புதிய எதிர்பார்ப்பு, புதிய தேவை ஆகியவற்றை புதிய கல்விக் கொள்கை பூர்த்தி செய்யும். கடந்த ஐந்து ஆண்டுகளாக, இரவு பகலாக உழைத்து இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கொள்கை குறித்து 15 லட்சம் கருத்துகள் வந்துள்ளன. இந்தத் திட்டத்தை மேம்படுத்த, இந்தக் கருத்துகள் உதவும். பழைய கல்வி முறை மாணவர்களை மிகவும் இறுக்கிவைத்திருந்தது. மொழி, கற்றலுக்கான ஒரு கருவியே தவிர, அதுவே கல்வி கிடையாது. எந்த மொழியை ஒரு குழந்தை எளிதில் கற்றுக்கொள்ள முடியுமோ, அந்த மொழியே கற்றலுக்கான மொழியாக இருக்க வேண்டும். நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக, திறம்பட அமல்படுத்த வேண்டும். இதை நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செய்வோம்” என்றார்.
மாநாட்டில் பிரதமர் மோடி
இதற்கு முன்னர் கடந்த 7-ம் தேதி, புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆளுநர்கள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459