இணையதளம் வழியாக எளிய முறையில் கல்விக் கடன் பெறுவது எப்படி? - ஆசிரியர் மலர்

Latest

29/09/2020

இணையதளம் வழியாக எளிய முறையில் கல்விக் கடன் பெறுவது எப்படி?

கல்விக் கடன் பெற விரும்புவோர் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி தனக்கென்று நிரந்தரக் கணக்கை உருவாக்க வேண்டும்.
இதில் மொபைல் எண்,
இ-மெயில் முகவரி,
மாணவர் பெயர்,
தந்தை பெயர்
ஆகியவற்றைக் குறிப்பிட்டால் பயனாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு கிடைக்கும். அதைப் பயன்படுத்தி, லாக்-இன் செய்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சப்மிட் செய்ய வேண்டும். இதில், தங்கள் இல்லத்துக்கு அருகில் உள்ள தேசிய வங்கி பெயரைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
பின்பு எந்தத் துறையைச் சார்ந்த படிப்பு, எத்தனை வருடப் படிப்பு , ஆண்டுக்கு எவ்வளவு ரூபாய் கல்விக்கட்டணம் தேவை உள்ளிட்ட தகவல்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இதன் பிறகு, பதிவு செய்யப்பட்ட எண்ணுக்குக் குறுந்தகவல் வரும். அதன் பிறகு, கல்விக் கடன் விண்ணப்பித்ததுக்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.
இதைத் தொடர்ந்து விண்ணப்பமானது சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிக்கு மெயில் மூலம் அனுப்பப்படும். பிறகு, வங்கி அதிகாரி கல்விக் கடனுக்கு விண்ணப்பித்த மாணவர் மற்றும் அவரின் பெற்றோரை வங்கிக்கு வருமாறு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுப்பார். வங்கி அதிகாரியைச் சந்தித்த பின் கல்விக் கடன் எந்தக் கிளை வங்கியின் வாயிலாக வழங்கப்படும் என்பது முடிவாகும். மேலும், கல்விக் கடனை வங்கிகள் வழங்கவில்லை எனில், அது குறித்து அந்த இணையத்திலேயே புகார் அளிக்கலாம். தேசியமயமாக்கப்பட்ட சுமார் 36 வங்கிகள் இந்த இணையதளத்தில் இணைந்துள்ளன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459