பள்ளிக்கல்வி செயலர் கூட்டம் 2 ம் முறையாக தள்ளிவைப்பு. - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பள்ளிக்கல்வி செயலர் கூட்டம் 2 ம் முறையாக தள்ளிவைப்பு.

மாவட்ட சி.இ.ஓ.க்களுடனான பள்ளி கல்வி செயலரின் கூட்டம் இரண்டாம் முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது . Sgta group தமிழக பள்ளி கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் இடமாறுதல் மற் றும் மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்ய நேற்று ஆலோசனை கூட்டம் நடப்பதாக இருந்தது . இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனர் பழனிச்சாமி அனைத்து மாவட்ட சி.இ.ஓ.க்கள் டி.இ.ஓ.க்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் களுக்கு சுற்றறிக்கை அனுப்பினார் . இதையடுத்து முதன்மை செயலர் தீரஜ்குமார் பங்கேற்க உள்ள கூட்டம் வரும் 1 ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக சுற்றறிக்கை அனுப்பினார் . இந் நிலையில் மீண்டும் இந்த கூட்டம் தள்ளி போடப் பட்டு வரும் 9 ம் தேதி கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது . அதனால் மாவட்ட கல்வி அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர் . அமைச்சரின் அனுமதி பெறாமல் கூட்ட தேதியை முடிவு செய்ததால் இரண்டு முறை தள்ளி போடப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

2 comments:

  1. Sir add this mobile no: 9626192993 in telegram

    ReplyDelete
    Replies
    1. Hey, I'm using Telegram to chat. Join me! Download it here: https://telegram.org/dl

      Delete