சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு அறிவிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு அறிவிப்பு

சென்னை,
கொரோனா தொற்று காரணமாக அனைத்து கல்லூரி படிப்புகளின் இறுதி செமஸ்டர் தேர்வு தவிர, மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. அதற்கான மதிப்பெண்ணும் வழங்கும் பணி முடிந்து, தேர்வு முடிவும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் வருகிற 15-ந் தேதி முதல் நடத்தப்பட வேண்டும் என்று உயர் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வை நடத்துவது தொடர்பாக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை பல்கலைக்கழகம் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டது.
அதில் தேர்வு வருகிற 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு முடிவு அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்றும், அடுத்த மாதம் 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment