தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க தனியாக இணையதள வசதி: அமைச்சர் செங்கோட்டையன் - ஆசிரியர் மலர்

Latest

06/09/2020

தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க தனியாக இணையதள வசதி: அமைச்சர் செங்கோட்டையன்


ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள மொடச்சூர் கீரிப்பள்ளம் கழிவு நீர் ஓடையை தூர்வாரும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், ஆசியர்கள் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

தனியார் பள்ளிகளில் 40 சதவீதம் தான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார். மேலும் தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க தனியாக இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து ,தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கையாக வைத்தால் அரசு பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், பள்ளி திறப்பு சாத்திய கூறு தற்போது இல்லை என தெரிவித்தார். மேலும், “அரசு பள்ளிகளில் 7,500 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ள நிலையில், அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்ட பின்னர், தேவைப்பட்டால் தனியார் பள்ளியில் பணிபுரிந்து தற்போது வேலை இல்லாமல் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களை அரசு பள்ளிக்கு தற்காலிக பணிக்கு எடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும்”இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459