தேர்வு ரத்து : மீறினால் அங்கீகாரம் பறிக்கப்படுமா ? அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏஐசிடிஇ கடிதம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தேர்வு ரத்து : மீறினால் அங்கீகாரம் பறிக்கப்படுமா ? அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏஐசிடிஇ கடிதம்


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, பள்ளி கல்லூரிகள் தொடர்ந்து மூடியே இருக்கிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இறுதி ஆண்டு தேர்வுகளை தவிர்த்து மற்ற தேர்வுகளை ரத்து செய்து அறிவித்தார். அரியர் வைத்திருக்கும் மாணவர்களும் தேர்வுக்கு பணம் கட்டி இருந்தால், அந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது.


எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் இருந்த விவகாரத்தில், ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதனை அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பாவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஏஐசிடிஇ அமைப்பிடம் இருந்து கடிதம் எதுவும் வரவில்லை என உயர்கல்வி அமைச்சர் கே.பி அன்பழகன் மறுப்பு தெரிவித்தார். மேலும் அப்படியான கடிதம் அனுப்பி இருந்தால் அதனை வெளியிட வேண்டும் என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment