தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு. - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு அறிவிப்பு.

நாள் : 30.09.2020

இடம் : நந்தனம் M.C ராஜா மாணவர் விடுதி 
01.01.2020 அன்றைய நிலையில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் நிலையிலிருந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு மூலம் நிரப்பிட தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

  செயல்முறை ஆணையில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக தற்காலிக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு நந்தனம் M.C ராஜா மாணவர் விடுதி 30.09.2020 காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளதால் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் தேர்ந்தோர் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வில் கலந்துக்கொள்ள ஏதுவாக அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் , மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு - கலந்தாய்வுக்கு கலந்துக்கொள்ள வரும் ஆசிரியர்கள் கட்டாயமாக முகக்கவசம் , அடையாள அட்டை அணிந்து வர வேண்டும் . மேலும் , சமூக இடைவெளியை பின்பற்றியே இருக்கையில் அமரவேண்டும் , கலந்தாய்வில் கலந்துக்கொள்ள வரும் ஆசிரியர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவுறுத்தப்படுகிறது

No comments:

Post a comment