அமெரிக்காவில் படிக்க செல்லும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

அமெரிக்காவில் படிக்க செல்லும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு
வாஷிங்டன்: அமெரிக்காவில் மாணவர்கள், ஆராய்ச்சி படிப்புகள், பத்திரிகையாளர்களுக்கான விசாவுக்கு குறிப்பிட்ட கால அளவை நிர்ணயிக்கும் புதிய  கட்டுப்பாடுக்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.அமெரிக்காவில் கல்வி பயிலும் சீன ஆராய்ச்சி மாணவர்கள் 1000 பேரின் விசாவை அதிபர் டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் ரத்து செய்தது. நாட்டின்  பாதுகாப்பை கருத்தில் கொண்டும், ரகசிய தகவல்கள் திருடப்படுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.  
இந்நிலையில், விசா திட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கவும், தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுவதை கருத்தில் கொண்டும் வெளிநாட்டு  மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பு படிப்பு மாணவர்கள், பத்திரிகையாளர்களுக்கான விசா கால அளவை குறிப்பிட்ட அளவுக்கு நிர்ணயித்து அதிபர் டிரம்ப்  நிர்வாகம் நேற்று பரிந்துரை செய்துள்ளது.
பெடரல் பதிவேட்டில் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய விதிமுறையில் இடம் பெற்றுள்ள பரிந்துரைகளின் விவரம் வருமாறு:
* ‘எப்’ (மாணவர் விசா), ‘ஜே’ (ஆராய்ச்சி மாணவர்கள்) விசாவில் தங்கி இருப்பவர்கள் அதிகப்பட்சம் 4 ஆண்டுக்கு மேல் இருக்கக் கூடாது.
* நிர்ணயிக்கப்பட்ட விசாவை எண்ணிக்கையை விட அதிகளவு மாணவர்கள் தங்கியிருக்கும் நாடுகளைச் சேர்ந்தவர்கள், தீவிரவாதத்திற்கு உதவும்  நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் மட்டுமே விசா வழங்கப்படும்.
* அதன்பின், இந்த மாணவர்களுக்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், முறையாக அரசுக்கு விண்ணப்பித்து கால அளவை 4 ஆண்டு வரை  நீட்டித்துக் கொள்ளலாம்.
* ‘ஐ’ விசா எனப்படும் வெளிநாட்டு பத்திரிகையாளர் விசாவில் திட்டமிடப்பட்ட பணிகளை  முடிக்க அதிகபட்சம் 240 நாட்கள் மட்டுமே விசா  வழங்கப்படும். தேவைப்பட்டால் கூடுதலாக 240 நாட்கள் விசா நீட்டிக்கப்படும். இவ்வாறு பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.தற்போதுள்ள விதிமுறைப்படி, எப், ஜே, மற்றும் ஐ விசாக்களில் சென்றவர்கள் அமெரிக்காவில் பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக தங்கி உள்ளனர்.  இதன் காரணமாகே, இந்த அதிரடி நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ளது.
விசா முடிந்த 30 நாளில் மூட்டையை கட்டணும்
அமெரிக்காவுக்கு செல்லும் வெளிநாட்டு மாணவர்கள் விசா முடிந்ததும் 60 நாட்களுக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும். இதை 30  நாட்களாக குறைக்கும்படியும் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் அமெரிக்காவில் படிக்க வரும் இந்தியா, சீனா உள்ளிட்ட  வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எச்1பி விசாதாரர்களுக்கு 1,100 கோடியில் பயிற்சி
கொரோனா பரவலால் அமெரிக்காவில் தொழிலாளர் சந்தைப்பிரிவு கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. பல்வேறு கல்வி நிறுவனங்கள், பயிற்சி  வழங்குநர்கள், தொழில் நிறுவனங்கள் பயிற்சியை வழங்குவதற்கான வழிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.  இந்நிலையில், அமெரிக்க பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எச்1பி விசாதாரர்களுக்கு உயர்தர பயிற்சி அளிப்பதற்காக அமெரிக்க அரசின்  தொழிலாளர் துறை ரூ.1,100 கோடியில் புதிய திட்டத்தை தொடங்கி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், தகவல் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, மேம்பட்ட  உற்பத்தி மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளில் உள்ள எச்1பி பணியாளர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்படும்.

No comments:

Post a Comment