பள்ளி குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு தபால் அட்டைகளை வடிவமைப்பதற்கான வரைதல் போட்டி - ஆசிரியர் மலர்

Latest

09/09/2020

பள்ளி குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு தபால் அட்டைகளை வடிவமைப்பதற்கான வரைதல் போட்டி

பள்ளி குழந்தைகளுக்கான கொரோனா சம்பந்தமான சிறப்பு தபால் அட்டைகளை வடிவமைப்பதற்கான வரைதல் போட்டி, ‘கோவிட் 19 ஸ்பெஷல் கவர் டிசைன் போட்டி’ எனும் பெயரில் நடைபெற இருக்கிறது. கோப்புப்படம்
பள்ளி குழந்தைகளிடம் இருக்கும் வரைதல் திறனை தூண்டவும், தபால் தலை பற்றி அறிந்துகொள்வதற்கும் சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் சார்பில் கொரோனா சம்பந்தமான சிறப்பு தபால் அட்டைகளை வடிவமைப்பதற்கான வரைதல் போட்டி, ‘கோவிட் 19 ஸ்பெஷல் கவர் டிசைன் போட்டி’ எனும் பெயரில் நடைபெற இருக்கிறது.
8 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் போட்டியில் பங்கேற்கலாம். போட்டிக்கான நுழைவு கட்டணம் ரூ.200 ஆகும். இதனை அருகில் உள்ள தபால் நிலையத்தில் இருந்து ‘எலக்ட்ரானிக் மணி ஆர்டர்’ மூலம் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பலாம். வருகிற 30-ந் தேதி நுழைவு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி ஆகும்.
வரைதலுக்கான தலைப்பு ‘கோவிட் 19 – காரணம், விளைவுகள், தடுப்புகள்’ போன்றவை. ஒவ்வொரு குழந்தையிடம் இருந்து ஒரு வரைபடம் மட்டுமே ஏற்கப்படும். வரைந்த வரைபடத்தை விரைவு தபால் மூலமாக ‘மேற்பார்வையாளர் (சிறப்பு தபால்தலை மையம்), அண்ணாசாலை தலைமை தபால்நிலையம், சென்னை – 600002’ என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். வரைபடங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி வருகிற 30-ந் தேதி ஆகும்.
விரைவு தபால் உறை மற்றும் வரைபட தாளின் பின்புறம் குழந்தை பெயர், பள்ளி பெயர், வகுப்பு, வயது, வீட்டு முகவரி, செல்போன் எண் ஆகிய விவரங்களை பென்சிலில் எழுதிட வேண்டும். போட்டி 2 பிரிவுகளாக நடத்தப்பட்டு ரொக்கப்பரிசு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் வரைபடங்கள் சிறப்பு அட்டைகளை தயாரிப்பதற்கான வடிவமைப்புகளாக பயன்படுத்தப்படும்.
மேற்கண்ட விவரங்கள் சென்னை அண்ணாசாலை தலைமை தபால்நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459