தேசிய கல்விக் கொள்கை 2020-தேசம் எதிர்நோக்கும் சவால்கள் - இணையவழிக் கருத்தரங்கம் - ஆசிரியர் மலர்

Latest

14/09/2020

தேசிய கல்விக் கொள்கை 2020-தேசம் எதிர்நோக்கும் சவால்கள் - இணையவழிக் கருத்தரங்கம்


*இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு(STFI)*

*தமிழ்நாடு மாநிலக்குழு*
*13.09.2020*

*அன்பான STFI இணைப்புச் சங்கங்களின் தோழர்களே!வணக்கம்.*


*06.09.2020 அன்று நடைபெற்ற இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்ட முடிவின்படி,தேசிய கல்விக் கொள்கை 2020 தொடர்பாக 18.09.2020 வெள்ளிக்கிழமை சரியாக மாலை 5 மணிக்கு  "இணையவழிக் கருத்தரங்கம்" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*

 *இந்நிகழ்வில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் C.N. பார்தி தொடக்க உரை நிகழ்த்துகிறார்.*

 *இக்கருத்தரங்கில் "தேசிய கல்விக் கொள்கை 2020-தேசம் எதிர்நோக்கும் சவால்கள்"என்ற தலைப்பில் நீதியரசர். அரிபரந்தாமன் (சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி)அவர்கள் கருத்தரங்க உரையை வழங்குகிறார்.*

*மேலும், இக்கருத்தரங்கில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அனைத்து இணைப்புச் சங்கங்களின் தலைவர்களும் கருத்துரை வழங்குகின்றனர்.*

 *இச்செய்தியை அனைத்து இணைப்புச் சங்கங்களின் தோழர்களும் தங்கள் சங்கத்தின் அனைத்து WhatsApp குழுக்களிலும், முகநூலிலும் வெளியிட்டு தங்கள் இயக்கத்தின் சார்பில் பெருமளவிலான நம் இயக்க உறுப்பினர்களைப் பங்கேற்கச் செய்திடவும், இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்திடும் வகையில் பணியாற்றவும் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக்குழு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

*கருத்தரங்கில் இணைவதற்கான Zoom App link,Meeting ID,Passcode,Facebook ID ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.*

Zoom link:https://us02web.zoom.us/j/86464220710?pwd=NU41Qk9teGZ5YzRUSWtoOUdCSTdyZz09


Meeting ID:86464220710
Passcode:471685
Facebook ID:TNPTF Tamilnadu State centre

 *தோழமையுடன்* *ச.மயில்*
*மாநில ஒருங்கிணைப்பாளர்*
*இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு*

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459