இஎம்ஐக்கான அவகாசத்தை 2 வருடங்கள் கூட நீட்டிக்க முடியும் - மத்திய அரசும், ரிசர்வ் வங்கி தகவல் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

இஎம்ஐக்கான அவகாசத்தை 2 வருடங்கள் கூட நீட்டிக்க முடியும் - மத்திய அரசும், ரிசர்வ் வங்கி தகவல்

வங்கிகளில் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை செலுத்த வழங்கப்பட்ட அவகாசத்தை, 2 ஆண்டுகள் வரை கூட நீட்டிக்க முடியும் என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக, தனிநபர் மற்றும் நிறுவனங்கள், பெற்ற கடனுக்கான தவணைத்தொகையை வசூலிக்க கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. கடந்த மார்ச் மாதம் முதல், ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வழங்கப்பட்டிருந்த இந்த அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, கடன் தவணைத் தொகையை செலுத்த வழங்கப்பட்ட அவகாசத்தை, 2 ஆண்டுகள் வரை கூட நீட்டிக்க முடியும் என, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் விளக்கம் அளித்துள்ளன.-NewsJ

No comments:

Post a comment