நீட் தேர்வு.. நாடு முழுக்க 15 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.. தமிழகத்தில் சரிந்த எண்ணிக்கை.. ஷாக்கிங் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

நீட் தேர்வு.. நாடு முழுக்க 15 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.. தமிழகத்தில் சரிந்த எண்ணிக்கை.. ஷாக்கிங்


டெல்லி: நாடு முழுக்க இந்த முறை நீட் தேர்வை 15 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இதற்காக தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்துள்ளது. பெரும் எதிர்ப்புக்கும், எதிர்பார்ப்பிற்கும் இடையே நாடு முழுக்க இன்று நீட் தேர்வுகள் நடக்கிறது. கொரோனா பாதிப்பிற்கு இடையிலும் நீட் தேர்வுகள் நடக்க உள்ளது, மக்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பி உள்ளது. மேற்கு வங்கம், ராஜஸ்தான் உட்பட 6 மாநில அரசுகள் நீட் தேர்வுக்கு எதிராக தொடுத்த உச்ச நீதிமன்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று நீட் தேர்வு நடக்க உள்ளது. நீட் தேர்வு.. தற்கொலை செய்து கொண்ட ஆதித்யா உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு.. தருமபுரியில் போராட்டம்எப்போது தேர்வுமதியம் 2 மணிக்கு நீட் தேர்வு நடக்கும். மொத்தம் 3 மணி நேரம் தேர்வு நடக்க உள்ளது. மதியம் 1.30 மணி வர மாணவர்கள் நீட் தேர்வு அறைக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது.தமிழ், மலையாளம், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்திலும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்கள்.சென்னை நிலைசென்னையில் மொத்தம் 46 மையங்களில் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் சென்னையில்தான் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளது. இந்த வருடம் நீட்டிற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 17% குறைந்துள்ளது.தமிழகம் எப்படிகடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்த இருந்தனர். இந்த வருடம் இதில் 17% குறைந்துள்ளது. ஆம் சென்ற வருடத்தை விட இந்த வருடம் நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்துள்ளது.இந்த ஆண்டு 1 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர்.இன்று எத்தனைநாடு முழுக்க 3843 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. முன்பு 2546 ஆக இருந்த தேர்வு மையங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு தேர்வு அறையில் 12 பேர் தேர்வு எழுதுவார்கள். நீட் தேர்வை எழுத வசதியாக மாணவர்களாக நாடு முழுக்க சில சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது

No comments:

Post a Comment