ஆங்கிலப் பள்ளி to அரசுப் பள்ளி : அட்மிஷனில் கலக்கும் மாநகராட்சிப் பள்ளி - ஆசிரியர் மலர்

Latest

20/08/2020

ஆங்கிலப் பள்ளி to அரசுப் பள்ளி : அட்மிஷனில் கலக்கும் மாநகராட்சிப் பள்ளி


ஈரோடு எஸ்.கே.சி சாலையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரோ, “ஈரோட்டிலுள்ள தனியார் சி.பி.எஸ்.சி பள்ளியில்தான் என்னோட பொண்ணும், பையனும் படிச்சிட்டு வந்தாங்க. இப்போ பையனை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பிலும், பொண்ணை அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பிலும் சேர்த்திருக்கேன். நானும், என்னோட மனைவியும் டெய்லரிங் தான் செஞ்சிக்கிட்டு இருக்கோம். எப்படியாவது குழந்தைகளைப் படிக்க வச்சு வாழ்க்கையில மேல ஏத்தி விட்டுடலாம்ங்கிற குருட்டு நம்பிக்கையில இதுவரைக்கும் படிப்புக்காக மட்டுமே 15 லட்ச ரூபாய் செலவு செஞ்சிருக்கேன்.
வட்டிக்குக் கடனை வாங்கி, மனைவி நகையை அடகு வச்சின்னு சிரமப்பட்டுதான் இதுவரைக்கு புள்ளைங்களை படிக்க வச்சேன்.




தலைமையாசிரியர் சுமதி
கொஞ்ச ஆங்கில அறிவுக்காக இவ்வளவு காசைக் கொட்டணுமான்னு காலத்துல யோசிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைச்சது. ஒரே ராத்திரியில முடிவு செஞ்சு, குழந்தைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாற்றி சேர்த்துட்டோம்” என்றார்.
மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் சுமதியிடம் பேசினோம். “வசதியில்லாத பலரும் கூட ஈகோ, ஸ்டேட்டஸ்க்காக அவர்களுடைய குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளில் படிக்க வைத்து வருகிறார்கள். கடுமையான பொருளாதாரப் பிரச்னைகள் இருந்தாலும் ஆங்கிலப் பள்ளிகளில் குழந்தைகள் படிப்பதைப் பெருமையான நினைக்கின்றனர். அந்த எண்ணம் இந்த சூழலில் ஓரளவு மாறியிருக்கிறது. பல பெற்றோர்கள் ஆங்கிலப் பள்ளிகளில் படித்துவந்த அவர்களுடைய குழந்தைகளை, அரசுப் பள்ளியில் சேர்க்க முன்வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். இதுவரை எங்கள் பள்ளியில் 17 அட்மிஷன் ஆகியிருக்கிறது. அதில் 5 பேர் தனியார் ஆங்கிலப் பள்ளியிலிருந்து வந்தவர்கள்” என்றார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459