NEET மற்றும்JEE தேர்வு : இன்றைய நிலவரம் - ஆசிரியர் மலர்

Latest

27/08/2020

NEET மற்றும்JEE தேர்வு : இன்றைய நிலவரம்

ஒரு பக்கம் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் 14 லட்சத்திற்கும் மேலானோர் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்துள்ளனர்.
பிரதமர் மோடி
கொரோனா காலத்தில் இந்த தேர்வுகளை நடத்தினால் சரியாக இருக்காது என்று பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 7 மாநில முதல்வர்கள் நேரடியாக தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்த இருக்கிறது.
ஆனால், தேசிய தேர்வு முகமை தனது முடிவில் இருந்து பின்வாங்குவதாக தெரியவில்லை. இந்நிலையில் நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் கீழ் இயங்கும் கல்லூரிகளின் 150-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதற்கிடையே நேற்று ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது. தேர்வு நடத்தினால் என்ன செய்வது? என்று யோசித்த மாணவர்கள் ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்ய தொடங்கியுள்ளனர். இதுவரை 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டவுன்லோடு செய்துள்ளனர்.
கல்வியாளர்கள் ‘‘சிலர் அவர்களுடைய அரசியல் லாபத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட முயற்சிக்கிறார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் மத்திய அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இன்று இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459