திட்டமிட்ட தேதிகளில் நீட், ஜேஇஇ முதன்மை தேர்வு - மத்திய அரசு - ஆசிரியர் மலர்

Latest

22/08/2020

திட்டமிட்ட தேதிகளில் நீட், ஜேஇஇ முதன்மை தேர்வு - மத்திய அரசு


உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க ஏற்கனவே திட்டமிட்டபடி ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஐஐடியில் சேர்வதற்கான ஜேஇஇ முதன்மை தேர்வு செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 6 ஆம் தேதி வரையும், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்து.

கொரோனா பாதிப்பால் தேர்வுகளை தள்ளிவைக்க கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் திங்களன்று தள்ளுபடி செய்து விட்டது.

இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை, ஏற்கனவே திட்டமிட்ட தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

ஜேஇஇ தேர்வு எழுதுவோருக்கு 6 லட்சத்து 49 ஆயிரம் நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டு விட்டன.

நீட் தேர்வு எழுதுவோருக்கு விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களை 5 முறை மாற்றவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459