அரசு பள்ளிகளில் செப்டம்பர் மாத இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு:
கொரோனா காரணமாக இந்த வருடம் பெரிதும் பாதிக்கப்பட்டது கல்வித்துறை. பொருளாதார நிலைமை கேள்விக்குறியாகதால் பல்வேறு தரப்பினரும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்த வருடம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிக அளவு அதிகரித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அரசு பள்ளிகளில் செப்டம்பர் மாத இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெற்றோர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அவர் நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி குறித்து முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் கூறியுள்ளார்.



No comments:
Post a Comment