ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது : கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எச்சரிக்கை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது : கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எச்சரிக்கை

ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரேஷன் கடை
தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் கூட்டுறவு சங்க கடைகள் இந்த பணியை செய்கின்றன.
பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   வேலை நிறுத்ததில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ‘No Work  No Pay’  என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எச்சரித்துள்ளார்.
ரேஷன் கடை ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்த நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment