மாணவர்களின் மனிதக் கடவுளே.. எங்கள் ஓட்டு உங்களுக்கே.. முதல்வருக்கு போஸ்டர் ஒட்டிய கோவை மாணவர்கள் - ஆசிரியர் மலர்

Latest

30/08/2020

மாணவர்களின் மனிதக் கடவுளே.. எங்கள் ஓட்டு உங்களுக்கே.. முதல்வருக்கு போஸ்டர் ஒட்டிய கோவை மாணவர்கள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இறுதியாண்டு தேர்வுகளை தவிர்த்து மற்ற தேர்வுகளை ரத்து செய்த நிலையில் அரியர் தேர்வு கட்டணங்களை செலுத்திய அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக தமிழக அரசு அறிவித்ததை அடுத்து மாணவர்களின் மனித கடவுளே, எங்கள் ஓட்டு உங்களுக்கே என ஒட்டப்பட்ட போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன. ஆக31 வரை லாக்டவுன் நீட்டிப்பு- கட்டுப்பாடுகள், தளர்வுகள் எவை? முதல்வரின் விரிவான அறிவிப்பு தமிழகத்தில் கொரோனா பரவல் தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. 6 மாதங்களான நிலையில் அவை இன்னும் திறக்கப்படவில்லை.பல பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்த இயலாததால் அவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கப்பட்டது. அது போல் 10ஆம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. .இந்த நிலையில் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாமல் கல்லூரிகள் அவதிப்பட்டு வந்தன. இந்த நிலையில் இறுதியாண்டு தேர்வுகள் தவிர்த்து அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. அதுபோல் அரியல் தேர்வுகளுக்கான கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்தவர்களாக தமிழக அரசு அறிவித்தது.போஸ்டர்கள்இதனால் மாணவர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதில் மாணவர்களின் மனங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குளிர்வித்தார். இதற்காக மாணவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்களை ஒட்டினர்.பேனர்திருச்சியில் மாணவர் ஒருவர் வைத்த பேனர்தான் செம ஹைலைட். திருச்சியில் ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வந்த சஞ்சய் நேரு என்ற மாணவர் 10-ஆம் வகுப்பிலும், 12 ஆம் வகுப்பிலும் அதிக மதிப்பெண் எடுத்த நிலையில் என்ஜினியரிங் பாடங்கள் அவருக்கு புரியவில்லை. இந்த நிலையில்தான் அரியர் வகுப்புகளுக்கு பணம் கட்டிய மாணவர்கள் அனைவருக்கும் ஆல்பாஸ் என்ற அறிவிப்பு வெளியானது.அரியர்அதன்படி 23 பாடங்களில் அரியர் வைத்துள்ள சஞ்சய்க்கு அடித்தது ஜாக்பாட். இதையடுத்து கொரோனாவுக்கு மிக்க நன்றி என கூறி சஞ்சய் பேனர் வெளியிட்டிருந்தார். அது போல் கோவையிலும் பல மாணவர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுளளனர். அதிலும் தமிழ்நாடு மாணவர்கள் முன்னேற்ற அமைப்பு சார்பில் ஒரு பேனர் ஒட்டப்பட்டுள்ளது.முதல்வர்அதில் மாணவர்களின் மனிதக் கடவுளே! எங்கள் ஓட்டு உங்களுக்கே! என்ற வரிகளுடன் போஸ்டர் இடம்பெற்றிருப்பது பார்ப்போரை அதிர்ச்சி அடைய வைக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு 6 மாத விடுமுறை, ஆல்பாஸ் என்ற பல்வேறு சலுகைகளை மாணவர்களுக்கு முதல்வர் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459