தேர்வுகளை ஆன்லைனில்' நடத்துவது குறித்து, பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தேர்வுகளை ஆன்லைனில்' நடத்துவது குறித்து, பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை


அனைத்து வகை பள்ளிகளிலும், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை உறுதி செய்யும் வகையில், முதல் பருவத் தேர்வை, 'ஆன்லைனில்' நடத்துவது குறித்து, பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக, ஊடரங்கு அமலில் உள்ளதால், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படவில்லை. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, 'ஆன்லைனில்' பாடங்கள் நடத்தப்படுகின்றன.அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், 'டிவி' மற்றும் ஆன்லைன் வழியே பாடங்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள், கல்விக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு மட்டும், ஆன்லைனில் பாடங்களை நடத்துகின்றன.

இந்நிலையில், அரசு தரப்பில் இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வினியோகிக்கப்பட்ட பின்பும், பல அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பாடம் நடத்தாமல் அலட்சியமாக இருப்பதாக, புகார் எழுந்துள்ளது. எனவே, வகுப்புகள் நடப்பதை உறுதி செய்ய, மாணவர்களுக்கு, முதல் பருவத் தேர்வை, ஆன்லைனில் நடத்த, பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a comment