காப்பீடு புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

காப்பீடு புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு


காப்பீடு புதுப்பிக்க காலக்கெடு நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தபால் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் விடுத்துள்ள செய்திகுறிப்பில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்த காப்பீட்டுதாரர்கள் சில காரணங்களால் அதற்கான தவணைத்தொகையை உரிய காலத்தில் செலுத்தாமல் விட்டுவிட நேர்கிறது.
இந்த பாலிஸிகளை உரிய ஆவணங்களுடன் விதிமுறைகளுக்கு உட்பட்டு எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கொள்ளலாம். தற்போது இந்த விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு, பாலிஸி தொடங்கி தவணை செலுத்துவதை நிறுத்திய முதல் மாதத்தில் இருந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த காலாவதியான பாலிஸிகளை 2019-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு பின்னர் புதுப்பிக்க இயலாது என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த காலக்கெடு வரும் நவம்பர் 30-ம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே பாலிஸிதாரர்கள் அரசு மருத்துவரிடம் உரிய உடல்நலச்சான்று பெற்று அருகே உள்ள அஞ்சலகத்தில் அதற்கான விண்ணப்பத்துடன் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் பாலிஸிகளை புதுப்பித்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment