கவின்கலை கல்லுாரி விண்ணப்பிக்க அவகாசம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

கவின்கலை கல்லுாரி விண்ணப்பிக்க அவகாசம்


கலை பண்பாட்டு துறை கட்டுப்பாட்டில் உள்ள இசை, கவின்கலை கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழக கலை பண்பாட்டு துறையின் கீழ், சென்னை மற்றும் கும்பகோணத்தில் கவின் கலை கல்லுாரிகள் செயல்படுகின்றன. அதேபோல, சென்னை, மதுரை, கோயம்புத்துார், திருவையாறு ஆகிய இடங்களில், நான்கு அரசு இசை கல்லுாரிகளும் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, ஆக., 17 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம், செப்., 7 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபரங்களை, www.artandculture.tn.gov.in என்ற, இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a comment