தமிழகத்தில் இ-பாஸ் தளர்வு.. உடனே வெளிமாநிலத்தில் இருந்து கிளம்பி வர வேண்டாம்.. இதை கொஞ்சம் படிங்க! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தமிழகத்தில் இ-பாஸ் தளர்வு.. உடனே வெளிமாநிலத்தில் இருந்து கிளம்பி வர வேண்டாம்.. இதை கொஞ்சம் படிங்க!


சென்னை: தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இ - பாஸ் முறையில் பெரிய தளர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமான சில மாற்றங்கள் உடன் இந்த தளர்வு அமலுக்கு வருகிறது.10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் போடப்பட்டது. இதை தொடர்ந்து போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக இ பாஸ் முறை கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட இ பாஸ் முறை காரணமாக, பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் போனது. இதனால் இ பாஸ் முறையில் தளர்வுகளை கொண்டு வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று தமிழக மக்கள் தொடர்ந்து இ பாஸ் தளர்வு குறித்து கோரிக்கை வைத்து வந்தனர்.
என்ன கோரிக்கை
இந்நிலையில் மக்களின் தொடர் கோரிக்கைகளை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இ - பாஸ் முறையில் பெரிய தளர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமான சில மாற்றங்கள் உடன் இந்த தளர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. அதாவது ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டம் செல்லலாம்.இனி தடை இல்லைதமிழகத்திற்கு உள்ளே இனி பயணிக்க யாருக்கும் தடை இல்லை. ஆனால் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வர தொடர்ந்து இ பாஸ் முறை அமலில் இருக்கும். அதாவது கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வர வேண்டும் என்றால் எப்போதும் இ பாஸ் விண்ணப்பிக்க வேண்டும். முறையான இ பாஸ் கிடைத்த பின்பே எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படும்.எப்போதும் போலவெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு இ பாஸ் நடைமுறை தொடரும் என்று தமிழகம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த பாஸ் விண்ணப்பித்த உடன் கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இ பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது .எப்படி விண்ணப்பிப்பதுஇ பாஸ் விண்ணப்பிக்கும் முறையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் இ பாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும். கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் இ பாஸ் வழங்கப்படும்.

No comments:

Post a comment