ஒரே நாளில் இத்தனை பேருக்கு புதிய தொற்றுகளா?.. உலகளவில் தொடர்ந்து இந்தியா முதலிடம்! - ஆசிரியர் மலர்

Latest

30/08/2020

ஒரே நாளில் இத்தனை பேருக்கு புதிய தொற்றுகளா?.. உலகளவில் தொடர்ந்து இந்தியா முதலிடம்!


உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.51 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 8.45 லட்சமானது. உலக நாடுகள் கடந்த 7 மாதங்களாக கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகின்றன. சில நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.ரஷ்யா ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டது. ஆனால் அதுகுறித்த விஞ்ஞானிகளின் சந்தேகங்களுக்கு அந்நாடு பதிலளிக்கவில்லை. இந்த நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.51 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 8.45 லட்சமாகும். கொரோனாவிலிருந்து இதுவரை 1.74 கோடி பேர் மீண்டுள்ளனர். 61,863 பேர் அபாய கட்டத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 லட்சமாகும். இதுவரை 1.86 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 42,513 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பிரேசிலில் 38 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை 1.20 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 34,360 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 35 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 63,657 பேர் பலியாகிவிட்டனர்.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 78,472 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளில் புதிதாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை இந்தியா முதலிடத்தில் உள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459