பள்ளி அருகே செல்லிடைபேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

26/08/2020

பள்ளி அருகே செல்லிடைபேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு


செல்லிடைபேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட சிவன்தாங்கள் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளி அருகே செல்லிடைபேசி கோபுரம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட சிவன்தாங்கள் பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.  இந்த நிலையில் சிவண்தாங்கள் பகுதியில் இயங்கி அரசு தொடக்கப்பள்ளிக்கு அருகில்,  தனியார் செல்லிடைபேசி நிறுவனம் சார்பில் செல்லிடைபேசி கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பள்ளிக்கு அருகே தனியார் செல்லிடைபேசிக்கு கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோபுர கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459