குறைந்து வருகிறது தங்கத்தின் விலை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

குறைந்து வருகிறது தங்கத்தின் விலை


சென்னை : தங்கம் விலை அதிக ஏற்றம் கண்ட நிலையில் சில தினங்களாக சரிந்து வருகிறது. இன்று(ஆக.,12) ஒரேநாளில் சவரன் ரூ.1,832 குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிறதொழில்களில் காணப்பட்ட மந்த நிலையால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்தனர். இதனால் தங்கம் விலை கிடு கிடுவென வரலாறு காணாத விலை ஏற்றத்தை சந்தித்து, அதிகபட்சமாக சவரன் ரூ.43 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.
இந்நிலையில் கொரோனா நோயின் தாக்கம் சற்று குறைந்து வருவதாலும் பிற தொழில்கள் மெல்ல மீண்டு வருவதால் என்னவோ தங்கத்தின் மீதான முதலீடும் சற்று குறைந்து வருகிறது. இதனால் கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. நேற்று சவரன் ரூ.984 குறைந்த நிலையில் இன்றும் மேலும் வீழ்ச்சி கண்டது. சென்னை, தங்கம் – வெள்ளி சந்தையில் இன்று(ஆக., 12) காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.229 குறைந்து ரூ.5,013க்கும், சவரன் ரூ.1832 குறைந்து ரூ.40,104க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.52,750க்கும் விற்பனையானது. இதன்மூலம் கடந்த மூன்று தினங்களில் தங்கம் விலை சவரன் ரூ.2,816 குறைந்துள்ளது.
வெள்ளியின் விலையும் தடலாடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளி ரூ.12.30 குறைந்து ரூ.70.50க்கும், கிலோ ரூ.12,300 குறைந்து ரூ.70,500க்கும் விற்பனையாகிறது.

No comments:

Post a comment