8 ஆண்டுகளில் 882 சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு தமிழகத்தில் அனுமதி - கடந்தாண்டு மட்டும் அதிகம் - ஆசிரியர் மலர்

Latest

08/08/2020

8 ஆண்டுகளில் 882 சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு தமிழகத்தில் அனுமதி - கடந்தாண்டு மட்டும் அதிகம்


8 ஆண்டுகளில் 882 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு மட்டும் 213 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழக அரசு மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் சிபிஎஸ்இ பள்ளிகளின், உயர்வு இயல்பாகவே மூன்றாவது மொழியாக தமிழகத்தில் இந்தி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர வழிவகுத்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் துவக்கப்படும் சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சிபிஎஸ்இ தவிர்த்து தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான தனியார் மெட்ரிக் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதேபோல தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. அதன்படி கடந்த 2011-ம் 29 சிபிஎஸ்இ பள்ளிகள் மட்டுமே தமிழகத்தில் செயல்பட்டு வந்தன.
இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கடந்த ஆண்டு மட்டும் 213 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. அதன்படி கடந்த எட்டு ஆண்டுகளில் 882 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அரசு பள்ளிகள் மூடப்படும் கூடிய நிலைமைக்கு தள்ளப்படுவதாக பரவலாக விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. அதேபோல சிபிஎஸ்இ பள்ளிகள் அதிகம் துவக்கப்படும் அதன் வாயிலாக தமிழகத்தில் ஹிந்தி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர வழிவகை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சிபிஎஸ்இ பள்ளிகளில் தாய்மொழி மற்றும் ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்பிக்கப்படுகின்றது. எனவே தமிழக அரசு ஒரு புறம் மும்மொழிக் கொள்கையை எதிர்த்தாலும், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அதிகளவு அனுமதி கொடுப்பதன் மூலம் ஹிந்தி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்வதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459