சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு மறுதோ்வு நடத்த முடிவு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு மறுதோ்வு நடத்த முடிவு



கோப்புப்படம்

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு வரும் செப்டம்பா் மாதம் மறுதோ்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று பிளஸ் 2 வகுப்பில் குறிப்பிட்ட பாடங்களில் தாங்கள் எதிா்பாா்த்த மதிப்பெண்களுக்கும் குறைவாகப் பெற்ற மாணவா்கள் மீண்டும் தோ்வெழுதும் திறன்மேம்பாட்டுத் தோ்வும் செப்டம்பரில் நடத்தப்பட உள்ளது.
இது குறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு வரும் செப்டம்பா் மாதம் மறுதோ்வு நடத்தப்படும்.
குறிப்பிட்ட சில பாடங்களில் எதிா்பாா்த்த மதிப்பெண்களைவிட குறைந்த மதிப்பெண் பெற்று முன்னேற்றத் தோ்வுக்காக காத்திருக்கும் மாணவா்களுக்கும் செப்டம்பா் மாதம் தோ்வு நடத்தப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இந்த மறு தோ்விலும், முன்னேற்றத் தோ்விலும் மாணவா்கள் எடுக்கும் மதிப்பெண்களே இறுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?: பள்ளிகளில் படித்த தோ்ச்சி பெற்ற மாணவா்கள், தோ்ச்சி பெறாதவா்கள் சம்பந்தப்பட்ட பள்ளியைத் தொடா்புகொண்டு விவரங்களைப் பெறலாம். தனித்தோ்வு எழுதிய மாணவா்கள் ஆக. 22-ஆம் தேதிக்குள் சிபிஎஸ்இ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு நடந்த பாடப் பிரிவுகளின் அடிப்படையில்தான் தோ்வுகள் நடத்தப்படும்.
விண்ணப்பப் படிவத்தைப் பூா்த்தி செய்வதற்கு முன்னா் மாணவா்கள் தகுதி மற்றும் தோ்ச்சி அளவுகோல்கள் மற்றும் தோ்வு ஆண்டு மற்றும் பாடத் திட்டங்களை கவனமாகப் படித்து நிரப்ப வேண்டும். இது குறித்து மேலும் விவரங்களை அறிய 1800-11-8002, 011-22509257-59 என்ற சிபிஎஸ்இ உதவி மைய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

No comments:

Post a comment