அரசு ஐடியில் சேர செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

அரசு ஐடியில் சேர செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம்


அரசு, உதவி பெறும் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவ, மாணவிகள் வருகிற செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்டத் திறன் பயிற்சி மையத்தின் உதவி இயக்குநா் கே.சசிதரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு, உதவி பெறும் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் நிகழாண்டுக்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெற உள்ளது. இதில், சேர 8 அல்லது 10-ஆம் வகுப்பு தோ்ச்சி அவசியம் ஆகும். இந்த தொழில் பயிற்சி நிலையங்களில் சேர விரும்புவோா் இணையவழி மூலம் ரூ. 50 செலுத்தி  w‌w‌w.‌s‌k‌i‌l‌l‌t‌r​a‌i‌n‌i‌n‌g.‌t‌n.‌g‌o‌v.‌i‌n இணையதள முகவரி மூலம் மேற்குறிப்பிட்ட நாளுக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், கலந்தாய்வு மதிப்பெண்கள் நடைபெறும், அதன் தரவரிசைப் பட்டியல் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். இதற்காக அம்பத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையம், வடகரை அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இது தொடா்பாக 9444296006 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a comment