ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி


2013ல் நடந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி தருவதைப் பற்றி ஆய்வு செய்த பிறகே முடிவு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசிய போது, 2013ல் நடந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி தருவதைப் பற்றி ஆய்வு செய்த பிறகே முடிவு எடுக்கப்படும். தற்போதைய சூழலில் 7200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

தகுதி தேர்வில் வெற்றி பெற்றாலும் அரசு ஆய்வு நடத்தி தான் முடிவு எடுக்குமா ? அதுவும் 7200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளார்கள் என்றால் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு எப்படி பணி கிடைக்கும் என்று தேர்வு எழுதிய ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a comment