தமிழகம்நாளுக்கு நாள் அதிகாரிக்கும் கொரோனா பரவல் எதிரொலி: விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் நாளை முதல் மூடப்படுவதாக அறிவிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழகம்நாளுக்கு நாள் அதிகாரிக்கும் கொரோனா பரவல் எதிரொலி: விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் நாளை முதல் மூடப்படுவதாக அறிவிப்பு


விருதுநகர்: நாளுக்கு நாள் அதிகாரிக்கும் கொரோனா பரவல் காரணமாக, விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் நாளை முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், விருதநகரையும் விட்டு வைக்கவில்லை. கடந்த ஒரு தினங்களாக உச்சகட்ட அளவிலான பாதிப்பு எண்ணிக்கைகளே இருந்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும் 240 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று 164 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் விருதுநகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,416 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 548 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்
. கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, விருதுநகரில் நாளை முதல் பட்டாசு ஆலைகளை மூட பட்டாசு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. நாளை முதல் வரும் 19ம் தேதி வரை பட்டாசு ஆலைகள் மூடப்படும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது

No comments:

Post a comment