ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மாட்டேன்: பிரதமருக்கு கடிதம் எழுதிய மாணவன் - ஆசிரியர் மலர்

Latest

23/07/2020

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மாட்டேன்: பிரதமருக்கு கடிதம் எழுதிய மாணவன்

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மாட்டேன் என்றும் வகுப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி பிரதமருக்கு திருச்சியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா ஆரம்பமானது முதல் கல்வி நிறுவனங்கள் இயங்கவில்லை. தற்போது இருக்கும் சூழ்நிலைகளில் மாணவர்களுக்கு பள்ளி,கல்லூரிகளிலேயே இருந்திருக்கலாமே என்ற எண்ணம் வந்துவிட்டது இந்த ஆன்லைன் வகுப்புகளால். அதுவும் இந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு செல்லும் மாணவர்களை சொல்லவே வேண்டாம்! அதுவும் தனியார் பள்ளிகள் என்றால் வாட்டி வதைத்து விடுவார்கள் பொதுத்தேர்வு எழுத வேண்டுமென்று …..ஆன்லைன் கிளாஸ்க்கு நோ சொல்லி பிரதமருக்கு கடிதம் எழுதிய கிராமப்புற மாணவன்
 
திருச்சி காவிரி கரையோரமாக இருக்கக்கூடிய சர்க்கார் பாளையம் சாலையில் காந்திபுரம் பகுதியில் உள்ள கிராமத்தில் உள்ளவர் பெஞ்சமின். இவர் தனது மகன் துரை திரவியத்தை அருகிலுள்ள தனியார் பள்ளியில் படிக்க வைத்திருக்கிறார். அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் துரை திரவியம் தனக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு துவங்க உள்ளது என பள்ளியிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. தகவல் வந்தவுடன் தன்னால் பங்கேற்க முடியாது என பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டேன் என்றார்.
இயல்பாகவே கிராமப்புறத்தில் உள்ள மாணவர்கள் சக நண்பர்களுடன் சகஜமாக விளையாடுவது பேசுவது என இருப்பார்கள். இவரும் அப்படித்தான் பள்ளியிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் குறித்த தகவல் வந்த பிறகு கிராமபுறத்தில் படிக்கும் மற்ற மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கல்வி பயில மிகவும் சிரமப்படுவது அவர் கண்முன் தெரிந்தது. அப்போது அவருக்கு தோன்றியது தான் பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணம்.
நாடு முழுவதும் நடைப்பெற்று வரும் “ஆன்லைன்” வகுப்பினால் பள்ளி குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிப்படும் சூழல் உருவாகி வருவதால், “ஆன்லைன்” வகுப்புகளை உடனே தடை செய்ய உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு,  ‘துரை திரவியம்’ கடந்த 20.07.2020 தேதி இண்டஉருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
 
அதில் “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கு, என் பெயர் துரை திரவியம், நான் ஒன்பதாம் வகுப்பலிருந்து 10 ஆம் வகுப்பிற்கு சென்றுள்ளேன். தமிழகத்தின் மையமாக இருக்கும் திருச்சி மாவட்டத்தில் The Indian Certificate of Secondary Education (ICSE) பள்ளியில் நான் படித்து வருகின்றேன்.
நாடு முழுவதும் நடைப்பெற்று வரும் ஆன்லைன் வகுப்பினால் தற்போது பிரச்சினை உருவாகியுள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தங்களுடன் இக்கடிதம் மூலம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது எனது தனிப்பட்ட பிரச்சினை அல்ல, எனது குடும்பத்தின் பிரச்சினையும் அல்ல, இது நம் நாடு முழுவதும் நிலவி வரும் மிகப்பெரிய பிரச்சினை.

 துரை திரவியம்  மாணவன் பேட்டி விபரம்

(ஆன்லைன் வகுப்புகளில் இணைய வேண்டுமானால் கம்யூட்டர், லேப்டாப், டேப், ஆன்ராய்டு மொபைல் இவற்றில் ஏதாவது ஒன்று அவசியம் இருக்க வேண்டும். மேலும், இவை இணைய வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியும். இந்த தொழிட் நுட்ப வசதிகள் எல்லா குடும்பத்திலும் நிச்சயம் இருக்காது.
ஒரு குடும்பத்தில் இரண்டு (அல்லது) அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் சூழல் இருந்தால், அனைவருக்கும் மேற்காணும் தனி, தனி கம்யூட்டர் மற்றும் இணைய வசதிகள் இருக்க வேண்டும். இது இந்தியாவில் சாத்தியமில்லை. ஏனென்றால், நம் இந்தியாவில் மின் வசதி இல்லாத கிராமங்களும், மின் இணைப்பே இல்லாத வீடுகளும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. மேலும், மின் இணைப்பு உள்ள வீடுகளில் (பகல் நேரங்களில்) அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இந்தியாவில் சில இடங்களில் இணைய வசதி இல்லை, அப்படியே இணைய வசதி இருந்தாலும் அது தொடர்ச்சியாக கிடைக்காது.
 
ஆன்லைனில் வகுப்பில் இருக்கும் குழந்தைகளை பெற்றோர்கள் அருகில் இருந்து கவனித்துக்கொண்டால், அவர்களால் வேலைக்குச் செல்ல முடியாது. கொரோனா வைரஸ் பரவும் இந்த ஆபத்தான சூழ்நிலையில் இது மிகப் பெரிய பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தும்.
ஆன்லைன் வகுப்பில் தொடர்ந்து நீண்ட நேரம் பங்கேற்றால், குழந்தைகளுக்கு கண் பார்வையில் பிரச்சினை, மன அழுத்தம், மூளை சோர்வு ஆகியவை உண்டாகும். இதனால் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மற்றும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள்.
நாட்டின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக பிரகாசிக்க வேண்டிய நம் மாணவர்கள், ஆபத்தான நோய் தொற்றுள்ள இந்த பேரிடர் காலத்தில், ஆன்லைன் வகுப்புகளால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுவதை நாம் அனுமதிக்க கூடாது. எனவே, நாடு முழுவதும் நடைபெற்றுவரும் ஆன்லைன் வகுப்புகளை உடனே நிறுத்துவதற்கு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும், ஆளுநர்களுக்கும் உத்தரவிடுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

தந்தை பேட்டி

கல்வி அவசியம்தான்; ஆனால், இந்த ஆபத்தான காலத்தில் உடல் ஆரோக்கியமும், உயிரும் அதைவிட முக்கியமானது. எனவே ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்ப்போம்; மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்போம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு
பத்தாம் வகுப்பு மிகவும் முக்கியமான நிலை.அதையும் பொருட்படுத்தாமல் 
இந்தியாவில் கிராமப்புறத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக குரல் கொடுத்துள்ளது துரை திரவியம் பாராட்டுதலுக்குரிய மாணவன்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459